சர்வதேச போலீஸ் அமைப்பின் (இண்டர்போல்) தலைவராக தென் கொரியாவின் கிம்ஜோங்யாங் தேர்வு

260 0

இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவராக தென் கொரியாவின் கிம்ஜோங்யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு கடந்த 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  இந்த அமைப்பில் உலகில் உள்ள 184 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன. இந்த அமைப்பின் தலைமையகம் பிரான்சில் நாட்டில் உள்ள லியான்ஸ் நகரில் செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் இந்த அமைப்பின் தலைவராக இருந்த சீனா நாட்டை சேர்ந்த மெங் ஹோங்வெய், சில நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு சென்ற போது திடீரென  மாயமானர்.  பின்னர்  லஞ்சம் வாங்கிய புகாரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர், பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் சீனா அரசு விளக்கம் அளித்தது.
இதனையடுத்து துணை தலைவராக இருந்த  ரஷ்யாவின் அலெக்சாண்டர் புரோகோப்சக் தலைவர் பதவிக்கான போட்டியில் களமிறங்கினார்.  அவருக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் தென் கொரியாவின் கிம் ஜோங்யாங் என்பவர்  களமிறங்கினார்.
இந்த விவகாரத்தில்  ரஷ்யா ஆதரவு பெற்ற அலெக்சாண்டர், தலைவர் பதவிக்கு வர மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அதனை தொடர்ந்து, கிம் ஜோங்யாங், தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக இன்டர்போல் அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment