‘பேஸ்புக்’ நிறுவன தலைவர் ஜூக்கர் பெர்க் பதவி விலகலா?

288 0

பேஸ்புக் நிறுவன தலைவர் ஜூக்கர் பெர்க் பதவி விலகுவாரா என தகவல் வெளியாகி உள்ளது.புகழ் பெற்ற சமூக வலைத்தளம், ‘பேஸ்புக்’ இப்போது சர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. அந்த வலைத்தள உபயோகிப்பாளர்கள் பகிர்ந்து கொள்கிற அந்தரங்க தகவல்கள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தால் திருடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் ரஷியாவின் செயல்பாடு குறித்து, அந்த நிறுவனம் மறைத்து விட்டதாகவும், மக்களை தவறாக வழிநடத்தி விட்டதாகவும் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை கட்டுரை வெளியிட்டது.

இதையடுத்து ‘பேஸ்புக்’ வலைத்தள நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல்அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க் பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, அவர், “அப்படி எந்தவொரு திட்டமும் இல்லை” என கூறி விட்டார்.

Leave a comment