ஜனாதிபதி, பிரதமருக்கு வெளிநாட்டுத் தடை இல்லை

363 0

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான வெளிநாட்டுப் பயணத் தடை எதுவும் விதிக்கப்படாது என்றும் அது தொடர்பில் சர்வதேச ரீதியில் எந்தவொரு பேச்சு வார்த்தையும் இடம்பெறவில்லையெனவும் வெளிநாட்டு தூதரக வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

இதேவேளை, நேற்று முன்தினம் எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்திருந்தார். எதிர்க் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அத்துடன், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அலரி மாளிகையில் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து வருவதாக தற்போதைய அரசாங்க குற்றம் சாட்டியுள்ளது. இவர்களிடம் இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுக்கு தவறான கருத்துக்களை எதிர்த் தரப்பினர் பரப்பிவருவதாகவும் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment