மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபர்

268 0

களுத்துறை தெற்கு பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தனது மனைவியை தாக்கி கொலை செய்துள்ளார்.

களுத்துறை பாலத்திற்கு அருகில் உள்ள பூ விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கள்ளக்காதல் காரணமதாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

களுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a comment