ஐ.தே.கட்சி பிரதிநிதிகளை சந்திக்க ஜனாதிபதி நிபந்தனை- எஸ்.பீ.

247 0

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒழுங்கான முறையில் நிறைவேற்றும் வரையில் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளை சந்திப்பதில்லையென ஜனாதிபதி அறிவித்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்தை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லும் நிலைப்பாட்டில் மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment