02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு

483 0

சுமார் இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிாகரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய – கடுவலை வீதியில் கல்வானை சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் இரண்டு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இருவரும் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்

Leave a comment