புதிய அரசாங்கத்தை அமைக்கவும்- பாட்டளி சம்பிக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

262 0

பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப பிரதமரை நியமிக்க முடியாது. எமக்கு தனிப்பட்ட விருப்புக்களுக்கு ஏற்ப ஒருவரை திருமணம் முடிக்க முடியும். விரும்பிய இடத்துக்கு போக முடியும்.

இருப்பினும், நியமனங்கள் சட்ட ரீதியாகவே முன்னெடுக்கப்படல் வேண்டும். நாடு இன்று சர்வதேசத்தில் இரண்டாம் தரத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், புதிய அரசாங்கமொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave a comment