கஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

344 0

கஜா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.  தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.
கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதி நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்து வருகிறது, கஜா புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் 1 மணி நேரம் ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா தீவிர புயல் தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து, 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும். இதனால், உள்மாவட்டங்களில் புயல் செல்லும் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக பாம்பன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. கஜா புயல் காரணமாக 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை, கடலுர், ராமநாதபுரம், மதுரை, திருப்பூர், திருவாருர், புதுக்கோட்டை, தஞ்சை, சிவங்கை, அரியலூர், தேனி,  காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், தூத்துக்குடி , சேலம் , திருச்சி, ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment