மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புதிய அமைச்சரவைக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்தை ஜனாதிபதி நிராகரித்து எழுத்து  மூலம் அது தொடர்பாக அறிவித்திருந்தார்.

இதன் காரணமாகவே ஜனாதிபதியுடன் நடத்தப்படவிருந்த கட்சி  தலைவர்களின் கூட்டத்தை ஜே.வி.பி. புறக்கணித்தது என்றும் இதன்போது தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமைதியின்மையை தொடர்ந்து பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.