‘கஜா’ புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது: வானிலை ஆய்வு மையம்

259 0

‘கஜா’ புயலின் வெளிப்பகுதி காரைக்கால் கரையைத் தொடத் தொடங்கியது. எட்டு மணி முதல் கரையைக் கடக்கத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தற்போது வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

” ‘கஜா’ புயல் தற்போது நாகப்பட்டினத்திற்கு கிழக்கே 138 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது தென் மேற்கு திசை நோக்கி மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

‘கஜா’ புயலின் வெளிப் பகுதி காரைக்கால் அருகே கரையைத் தொடத் தொடங்கியுள்ளதால் காரைக்கால் பகுதியில் மழை தொடங்கியுள்ளது.இதுதான் நிகழ்வு.

தற்போது வெளிப்பகுதி கரையைத் தொடத் தொடங்கியுள்ளது. இதுதான் ஆரம்ப நிலை. 8 மணியிலிருந்து நிகழ்வு நடக்க ஆரம்பிக்கும். 9 மணிமுதல் 10 மணி வரை காற்றின் வேகம் அதிகமிருக்கும்.

கண் பகுதி அளவு மட்டும் 20 கி.மீ. நீளம். புயல் 8 மணி முதல் கரையை நெருங்கும் அப்போது காற்றின் வேகம் அதிகரிக்கும்”.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Leave a comment