யேர்மனி முன்சன் நகரில் கடந்த 24.9.2016 சனிக்கிழமை லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் அந் நகரத்தில் உள்ள மக்கள் கலந்துகொண்டு எம் வீரத்தளபதிகளுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி தம் வீரவணக்கத்தைத் தெரிவித்தனர் . இங்கு தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல கலை நிகழ்வுகளும் காலத்திற்கு ஏற்ப நாம் எப்படிச் செயற்படவேண்டும் என்ற சிறப்புரையும் இடம்பெற்றது. பின்பு தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப் பாடலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.















































