வடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் !!

2 0

கஜா  புயல் குறித்து முன்னெச்சரிக்கை பணிக்கான   விழிப்புணர்வு   செயற்திட்டம்    யாழ்.அரச அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் நேற்று  காலை  யாழ்  மாவட்டச் செயலக  மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்  அனர்த்த முகாமைத்துவம்  தொடர்பான அவசரகாலக் கலந்துரையாடலில்  கஜா புயலின் தாக்கம் குறித்தும் , மீனவர்களை  கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் , கரையோர மக்களை பாதுகாப்பான  இடங்களில் தங்கி இருக்கும் படியும் , மின்னல் முழக்கங்கள்  ஏற்படும்  போது மின்சாரம் மற்றும் கேபிள் இணைப்புக்களை நிறுத்துமாறும் அறிவுறுத்தப் பட்டத்துடன்  அவசர தேவைகளின் பொருட்டு  117 என்ற அவசரகால இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும்   யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ  நிலையம் 021 221 7171 ,   /    021 4976 224 , /  0094.  773957894 , யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலை  021 222 2261  /  அவசர அம்புலன்ஸ் சேவை  1990 /’   அவசர மின்சார சேவை  வடமாகாணம்  021  202 4444 / 021 222 2496 /  021 222 3233  ஆகிய  இலக்க ங்களுக்கு  தொடர்பு கொள்ளும் படி  வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்,

வங்களா விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலை கொண்டுள்ள கஜா  புயல்  அடுத்த 24 மணித்தியாலயங்களில்  தாக்கும் சக்தியைக் கொண்டுள்ளதாக எதிர்பார்க்கப் படுகின்றது.

வங்களா விரிகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள கஜா புயல் இன்று   [15/11/2018 ] வியாழன்   மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணிக்குள்ளாக தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மற்றும் நாகபட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும்.

யாழ் குடாநாட்டின் கரையோரப்பகுதிகளான பருத்தித்துறை முதல் காங்கேசன்துறை கடற்பகுதி ஊடாக இப்புயல் நகர்ந்து செல்லுமென கணிக்கப்பட்டுள்ளதுடன்.

அதி வேகமான காற்று வீசுவதுடன் மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஆகவே,கரையோர பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் .

இரவு வேளையில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யுமாக இருந்தால் அதனால் ஏற்படும் இடர்பாடுகள் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புண்டு. அதனை ஈடு செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்வது அந்நேரத்து இடையூறை எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும் படியும் மேலும் , யாழ்.குடாநாட்டிடை அண்மித்த பகுதிகளில்  மணித்தியாலயத்திற்கு  100 கிலோ மீற்றர் வேகத்தில்  கடும் காற்று வீச்சாக கூடும் என்றும் , மன்னார் புத்தளம் திருகோணமலை , முல்லைத்தீவு வவுனியா  ஆகிய பகுதிகளில் மாவட்டங்களில் காற்று பலமாக வீச்சாக கூடும் என்றும் கரையோர  மாவட்டங்களில் பலத்த காற்றுக்கான சாத்தியம் உண்டு.

மீனவர்கள் கடலுக்கு போவதை தவிர்க்க வேண்டும் .எனவே  மின்னல் தாக்கம்  ஏற்படும்   போது செல்போன்  பாவனை ,மின்சார பாவனைகளைத்த தவிர்க்க வேண்டும்    சூறாவளி வந்தால் கிராம சேவையாளர் ஊடாக   மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்த .வேண்டும், மீனவர்கள்  கடல் எல்லை தாண்ட வேண்டாம் என்று அறிவிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை  கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும் .

என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நீர்வளத்துறை பொறியியலாளர்  எஸ் .சர்வராஜா கருத்து தெரிவிக்கையில் எங்களிடம்  வழுக்கையாறு திட்டத்தில் தான் அதிகம் செயற்படுத்தப்பட வேண்டி இருக்கும்  பெரும் மழை  பெய்தால்  தேவை வரும் . அத்துடன் யாழ்ப்பாணத்தில் 520  நீர்த்த தடுப்பு கதவுகள் திறக்க வேண்டி வரும் .

மழை  தொடர்ச்சியாக பெய்தால்  தான் இந்த நிலை வரும் . அதனால்  இந்நிலை வரும் போது  உடனடி செயற் பாட்டுக்கு  வாகன வசதிக்கு செய்து தரும்படி  அரச அதிபரிடம் கேட்டுள்ளோம் .

நீர் மட்டம்  கூடினால் உவர் நீர்த்தடுப்பணையினையோ  ,வெள்ள  நீர்த்த தடுப்பணையினையோ வெட்ட  வேண்டாம் என மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் .

உடன் பிரச்னையை தீர்க்க  வாய்க்கால் கதவுகளை திறந்து விடுவோம் . தடுப்பணைகளை வெட்டினால்  சூறாவளி நேரம் கடல் நீர் மட்டம்  உயர்ந்திருப்பதால் கடல்  நீர் நிலத்தடி நீருக்கு பாதிப்பை தரும் .

எனவே மக்கள் தடுப்பணைகளை  வெட்ட வேண்டாம் என்றும் , வெள்ள  அனர்த்தத்தில் இருந்து  மக்களை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்றுக்கொள்வோம்  என்றார்.

இது குறித்து யாழ் பல்கலைக் கழக புவியியற்துறை பேராசிரியர்   நா. பிரதீபராஜா  விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது/.கஜா புயல் . தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கஜா புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே 490 கி.மீ.தூரத்திலும் நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே சுமார் 580 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

இன்று மாலை 4.30 மணிக்கும் இரவு 9.00 மணிக்கும் இடையில் கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும். கஜா புயல் கரையைக் கடக்கும் போது இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தெல்லிப்பளை, பருத்தித்துறை, மருதங்கேணி கண்டாவளை, கரைதுறைப்பற்று வேலணை, சங்கானை ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுகளுக்குட்பட்ட கரையோரப் பகுதிகளில காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. முதல் 80 கி.மீ வேகத்தில் காற்றுவீசக்கூடும்.

உட்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ முதல் 60 கி.மீ. வரை வீசக்கூடும். சில நேரங்களில் காற்று 90 கி.மீ. வேகத்தில் கூட வீச வாய்ப்புண்டு.

இன்று காலை முதல் மழை புயல் பொழிவு இருக்கும்.  ஆரம்பத்தில் தூறலுடன் இருந்தாலும் பிற்பகலில் கன மழைக்கு வாய்ப்புண்டு. 16 மற்றும் 17-ம்  திகதிகளிலும் இடையிடையே மழை தொடரும்.

சில சமயங்களில் கரையைக் கடக்கும் போது கஜா வலுவிழந்த புயலாக மாறினால் கனமழை கிடைக்கும் அத்துடன் காற்றின் வேகம் குறைவாக இருக்கும்.என்றும் அவரது அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில்   நீர்வள பொறியியலாளர்கள், வானிலை அவதானிப்பு நிலைய அதிகாரிகள்,  முப்படை அதிகாரிகள்,  பிரதேச செயலாளர்கள் , அரச , மற்றும் அரச சார்பற்ற பணியாளர்கள், சமுதாய செயலாளிகள், கிராமசேவையாளர்கள், வர்த்தக சங்கத்தினர் எனப்  பலரும்  கலந்து கொண்டனர் . மேலும்  , யாழ்ப்பாணம் மட்டுமன்றி  முல்லைத்தீவு,  மன்னார், திருகோணமலை,  மட்டக்களப்பு , வவுனியா  ஆகிய மாவட் ட  செயலகங்களிலும்  அனர்த்த முகாமைத்துவ அவசரகால ஒன்று கூடலும் , விழிப்புணர்வும்  இடம் பெற்றது.

அத்துடன் அண்மையில் வன்னிப்  பெருநிலப் பரப்பில் பெய்த மழை காரணமாக முல்லைத்த தீவில் ஆண்டான்குளத்தை அடுத்துள்ள நித்திகைக்குளத்துக்கு அண்டிய கிராமத்தைச்சேர்ந்த 6 பேர் 06.11.2018  அன்று வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்த நிலையில்  முன்னர் விமானப்படையினரின் உலங்குவானூர்திமூலம் மீட்கப்பட்டனர்.

அனர்த்த முகாமைத்துவ பிரிவு  அக்கறை காட்டாத  போது  ஊடகவியலாளர்களின்  அறிவுப்பிற்கு  ஏற்ப இராணுவம் மற்றும் கடற்படை யினர்  எடுத்த முயற்சியினால்  7.11.2018 அன்று அதிகாலை விமானப் படையின்  ஹெலி ஹோப்டர் மூலம்  மீட்கப் பட்டமை  குறிப்பிடவேண்டிய சம்பவம் .

இந்நிலையில்   தமிழ் நாட்டிலும்  கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, இரவு நேரத்திலும் நாகப்பட்டினம் நம்பியார் நகர்    சாமந்தான் பேட்டை   மீனவர் கிராமத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு. ஓ.எஸ்.மணியனும்  சட்டவல்லுனர் தங்க.கதிரவனும் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு  மீனவ மக்களுக்கு புயல் அபாய எச்சரிக்கை  குறித்தும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவது குறித்தும் அறிவுறுத்தியும்  .கஜா  புயல் வலுவடைந்து வருவதன்  சாத்தியம் காரணமாக  கடற்கரை பகுதியான நாகூர் பட்டினச்சேரி பகுதியில் புயல் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மக்களுக்கு தங்கும் வசதிகளைப் பார்வையிட்டு பாதுகாப்பாக இருக்க பொது மக்களுக்கு  அறிவுறுத்தலும்  வழங்கியுள்ளனர்.

Related Post

விசேட தேவையுடைவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்-ஜனாதிபதி

Posted by - November 25, 2016 0
விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பாதிப்புற்றோருக்கான நிவாரண சங்கத்தின் 185ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி,…

உலகின் உயரமான நத்தார் மரம் – கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு

Posted by - December 7, 2016 0
கொழும்பு காலி முகத் திடலில் அமைக்கப்பட்டு வருகின்ற உலக சாதனைக்குரிய நத்தார் மரம் அவசியமற்றது என, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் சன் லொரேன்சோ இன் லுச்சீனா-வின் கர்தினால்-குரு ஆல்பர்ட்…

ஜனா­தி­ப­தியின் மக்கள் செல்­வாக்கை குறைப்­ப­தற்கு திட்­ட­மி­டப்­பட்ட சதி-மஹிந்த அம­ர­வீர

Posted by - January 5, 2018 0
ஜனா­தி­ப­தியின் செல்­வாக்கை குறைப்­ப­தற்கு சதி நட­வ­டிக்கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பல கட்­சி­களும் இதில்  தொடர்புபட்­டி­ருப்­ப­தாக தகவல் வெளி­வந்­துள்ளது என சுதந்­திரக்கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர…

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அழுத்தத்தினால் சிறிசேனவின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்

Posted by - December 10, 2018 0
ஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை  கொழும்பு ஊடகமொன்று அகற்றியுள்ளது என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.…

மஹிந்த இராஜினாமா செய்வது கௌரவமாகும்- பாட்டளி சம்பிக்க

Posted by - December 14, 2018 0
மஹிந்த ராஜபக்ஷ இப்போதாவது கௌரவமான முறையில் தனது பிரதமர் பதவியை  இராஜினாமா செய்து கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி இருந்தவாறு நாட்டைக் கொண்டு செல்ல நடவடிக்கை…

Leave a comment

Your email address will not be published.