ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பில் இன்று (13) சந்திக்கவிருந்தார். எனினும், அந்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க விருப்பதனால், அக்கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.

