யாழில் கிணற்றில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி

312 0

மின்சாரம் தாக்கி பலியானதாகக் கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை  பிற்பகல் கரணவாய் மத்தி, ஊரியான் பகுதியில் இடம்பெற்ற குறித்த  சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 53 வயதான இரத்தினம் இரவீந்திரநாதன்  என்பவரே பலியாகியுள்ளார்.

மேற்படி குடும்பஸ்தர் தனது சிறிய தாயாரின் வீட்டில் கிணற்றின் உட்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் மோட்டரை திருத்துவதற்காக இறங்கியபோது   மின்சாரம் தாக்கி கிணற்றுக்குள் வீழ்ந்ததாகவும் கிணற்றில் வீழ்ந்து கிடந்த சடலத்தை நெல்லியடி பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment