உயர் நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு

222 0

பாராளுமன்றம் கைலைக்கப்பட்டமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை (13) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால், கால அவகாசம் கோரப்பட்டதையடுத்தே குறித்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் பிரதம நீதியரசர் நளின் பெரேரா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

குறித்த மனுக்களில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தத்தின் அடிப்படையில் இவ்வாறு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என குறித்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட தனிநபர்கள் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment