இரணைமடுக்குளத்தின் நீர் மட்ட அதிகரிப்பால் பண்ணையாளர்கள் அவதி!

257 0

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்தமையால் குளத்தின் நீரேந்து பிரதேசங்களில் தமது கால் நடைகளை வைத்து பராமரித்த பண்ணையாளர் தமது கால்நடைகளை வெளியேற்றுதில் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக தெரிவித்துளத்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த செப்ரம்பர் மாதம் முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையான காலப் பகுதிகளில் கால்நடைப்பண்ணையாளர்கள் தமது கால் நடைகளை  கட்டிப் பராமரிக்குமறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை மாவட்டத்தில் மேச்சல் தரவைகள் எதுவும் இல்லாத நிலையில் மாவட்டத்தில் உள்ள சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட கால் நடைகளை இரணைமடுக்குளத்தின் நீரேந்து பிரதேசத்தில் வைத்துப் பராமரித்து வந்தனர் .

கடந்த வாரம் பெய்த மழையினால் இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 30 அடி 7அங்குலமாக உயர்வடைந்ததுடன் குளத்தின் நீரேந்து பிரதேசங்கள் யாவும் நீர் நிரம்பியுள்ளன.

இதனால் இரணைமடுக்குளத்தில் கால்நடைகளை வைத்துப் பராமரிக்க முடியாத நிலையில் பண்ணையாளர்கள் தமது கால் நடைகளை முழுமையாக  வெளியேற்றி வருகின்றனர்.

இதே வேளை நூற்றுக்கணக்கான கால் நடைகளும் கானால் போயுள்ளன. இவ்வாறு குளத்தில்  இருந்து வெளியேற்றிய கால்நடைகளை தற்போது பராமரிக்க கூடிய மேச்சல் தரவைகள் இல்லாத நிலையில் ஏ-9 வீதியூடாக பச்சிலைப்பள்ளி மற்றும் வடமராட்சி கிழக்கு  ஆகிய பிரதேசங்களுக்கு கொண்டு செல்லுகின்ற போதும் அங்கும் பராமரிப்பதில் பொரும் சிரமங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ள பண்ணையாளர்கள் மாவட்டத்தில் அதிக மக்களின் வாழ்வாதாரமாக கால் நடை வளர்ப்புக் காணப்படுகின்ற போதும் மேச்சல் தரவைகளை அமைத்துத் தருமாறு கடந்த எட்டு வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதும் மத்திய மற்றும் மாகான அரசுகள் இதனை அமைத்து தரவில்லை என்றும் இதனால் ஒவ்வொரு வருடத்திலும் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவித்துள்ளதுடன் எதிர் காலத்தில் மேச்சல் தரவைகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment