இலங்கை மக்களே தங்கள் தலைவிதியை தீர்மானிக்கட்டும்!

283 0

இலங்கை மக்களே தங்களிற்கு யார் தேவை என்பதை தீர்மானிக்கட்டும் என்பதே  இந்தியாவின் அணுகுமுறையாக அமையவேண்டும்  என முன்னாள்  இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் கன்வல் சிபல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நசனல் ஹெரால்டிற்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான திறனை சீனா கொண்டிருக்கின்றது என தெரிவித்துள்ள கபில் சிபல் நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் ஆட்சிக்கு வருவதற்கு சீனா உதவியதை சுட்டிக்காட்டியுள்ளார்

மகிந்த ராஜபக்ச தான் சீனாவிற்கு நெருக்கமானவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளதால் சீனா மகிந்த ராஜபக்சவே தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என விரும்புகின்றது என்ற அனுமானத்திற்கு வரலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடன்பொறி குறித்த  நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளபோதிலும் அவர் இந்தியாவிலிருந்து வரும் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு சீனா ஆதரவை பயன்படுத்துவார் எனவும் கன்வல் சிபல் தெரிவித்துள்ளார்.

இந்தியா சீனாவிற்கு இடையிலான பூகோள அரசியல் போட்டி தீவிரமடைந்துள்ள மாலைதீவை சுட்டிக்காட்டியுள்ள அவர்  மாலைதீவில் இந்தியா எதுவும் செய்யவில்லை ,இதேபோன்று  உள்ளுர் உணர்வுகளின் அடிப்படையிலே இலங்கை மக்களே தங்களிற்கு யார் தேவை என்பதை தீர்மானிப்பதற்கு இந்தியா விட்டுவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

இந்திய  இலங்கை குறித்த தனது இராஜதந்திர நடவடிக்கைகளை இரண்டுமட்டங்களில் முன்னெடுத்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

முதலாவது வெளிப்படையாக  இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுத்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியா உள்விவகாரங்களில் இருந்து தன்னை தனிமைப்படுத்தியிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்தியா இலங்கையில் சீனா செயற்படுவது போன்றும் செயற்பட்டுக்கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர் இந்தியா விக்கிரமசிங்கவிற்கும் அவரது வேட்பாளர்களிற்கும் எந்தளவிற்கு ஆதரவை வழங்கும் என்பது இந்தியாவிற்கு மாத்திரமே தெரிந்திருக்ககூடிய இரகசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நசனல் ஹெரால்ட் இந்தியாவிற்கு கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய முன்னாள் தூதுவர் கோபலகிருஸ்ண காந்தி இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் மீண்டும் ஜனநாயகத்தை வெற்றிபெறவைப்பார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a comment