சர்வாதிகாரிகள்கூட இப்படி நடந்ததில்லை:ராஜித கவலை

284 0

ஜனாதிபதியினதும் சட்ட முரணான பிரதமரினதும் முதலாவது ஆட்டமே தோல்வியில் முடிவடைந்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர்,

நேற்று நள்ளிரவு அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாகத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட ராஜித,

ஜனாதிபதியும் புதிய பிரதமரும் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறினர். பின்னர் அதே தரப்பிலிருந்து 104 தான் உள்ளது எனத் தெரிவித்தனர்.

இன்னும் 9 போதாது என்று நேற்று தெரிவித்தனர். இதனால்இ இவர்களின் முதலாவது ஆட்டத்திலேயே தோல்வியடைந்துள்ளனர்.

இரண்டாவது ஆட்டத்தையும் அதிகாரத்தை மீறி ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதனையும் நாம் தோல்வியடையச் செய்வோம்.

ஜனாதிபதி முறைமையில் காணப்படும் அதிகாரத்தை குறைப்பதாக தெரிவித்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று எம்முடன் இணைந்து கடந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறினார்.

ஆனால்இ இன்று அரசியல் அமைப்பில் இல்லாத அதிகாரத்தையும் பயன்படுத்துகிறார்.

ஜனாதிபதி இன்று பழிவாங்குவது அவரை அந்தப் பதவிக்கு கொண்டு வந்தவர்களிடம் ஆகும். அவரைத் தோற்கடிக்க முயற்சித்தவர்களுடன் இன்று கைகோர்த்துள்ளார்.

இதுபோன்ற ஒரு ஜனாதிபதி உலகில் எங்கும் இருக்கமாட்டார்.

சர்வாதிகார ஜனாதிபதிகளும் கூட தனது எதிரியுடன் சேர்ந்துகொண்டுஇ தனது நண்பர்களுக்கு எதிராக செயற்பட்டது கிடையாது.

தற்போது தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தேர்தலுக்கு தயார். அதேபோன்று சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்யவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment