எரிபொருள்விலையை கணிசமாக குறைக்க முடியும் -பவித்ரா

24 0

எதிர்காலத்தில் எரிபொருள் விலையை குறைப்பதற்குரிய முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கனிய வளத்துறை இராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தமது அமைச்சுப்பதவியை இன்று(வியாழக்கிழமை) பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு 100 சதவீதம் மசகெண்ணெய்யை மாத்திரம் இறக்குமதி செய்து, அதனை சுத்திகரிப்பதன் மூலம், எரிபொருள்விலையை கணிசமாக குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுதொடர்பில் தாம் அவதானம் செலுத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் அரச மொழிகள் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள வாசுதேவநாணயக்கார, இன்றையதினம் தமது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார்.

Related Post

ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்- தேசிய பிக்குகள் முன்னணி

Posted by - October 19, 2016 0
தேசிய வளங்களை விற்பனை செய்யும் ஐக்கிய தேசிய கட்சியின் திட்டங்களுக்கு எதிராக ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. தேசிய…

என்னை சிறைப்படுத்தியதற்கான முழுப் பொறுப்பும் அரசாங்கத்துக்குரியது- ஞானசார தேரர்

Posted by - June 26, 2018 0
தன்னைச் சிறையில் போட்டதற்கான முழுப் பொறுப்பும் இந்த அரசாங்கத்துக்குரியது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள்…

இலஞ்ச, ஊழல் சட்டத்தில் திருத்தம்

Posted by - December 21, 2017 0
30 வருட காலம் பழைமை வாய்ந்த இலஞ்ச, ஊழல் சட்டம் திருத்தி அமைக்கப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின்…

மைத்திரி விரைவில் யாழ்ப்பாணத்துக்குப் பயணம்!

Posted by - October 21, 2016 0
வலி.வடக்கில் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட 750 ஏக்கர் காணிகளும் இம்மாத இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு பொது மகன் மீதும் 19 500 ரூபாய் வரி

Posted by - November 14, 2016 0
இந்த முறை வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பொதுமகன் மீதும் 19 ஆயிரத்து 500 ரூபாய் வரி சுமை சுமத்தப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு…

Leave a comment

Your email address will not be published.