இலங்கை சர்வதேசரீதியில் அவப்பெயரை சந்திக்கவேண்டிய நிலையேற்படலாம்- அமெரிக்கா எச்சரிக்கை

15 0

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு பாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமெரிக்கா பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையின் நற்பெயரிற்கு  பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர்நவுவட் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர் வை காண்பதற்காக இலங்கை ஜனாதிபதியை பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமானால் இலங்கையில் நிலவும் நிச்சயமற்ற நிலை மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கூட்டுவது மேலும் தாமதமாவது நல்லாட்சி ஸ்திரதன்மை பொருளாதார வளர்ச்சி குறித்த இலங்கை மக்களின் அபிலாசைகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

பயணியைத் தாக்கிய ரயில் நிலைய ஊழியர்கள் மூவர் கைது

Posted by - July 26, 2017 0
பயணி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டுத் தொடர்பில், சிலாபம் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இரண்டு ஊழியர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

வாக்களிப்பு வீதம் குறைவதற்கான முக்கிய காரணம் – தேர்தல்கள் ஆணையாளர்

Posted by - February 27, 2019 0
அரசியல் வாதிகள் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின்மையே தேர்தல்களில் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவதற்கான முக்கிய காரணம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண…

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது

Posted by - March 12, 2019 0
இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபரொருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாத்தறை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த அதிபர் 8 ஆயிரம்…

நாமல் ராஜபக்ஷவைக் கைதுசெய்யத் தீர்மானம்

Posted by - July 10, 2016 0
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை நாளை (திங்கட்கிழமை) கைதுசெய்யவுள்ள தீர்மானித்துள்ளதாக காவல்துறை தலைமையகத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்ரமசிங்க கடுமையான தமிழ் இனவாதி – கலகொட அத்தே ஞானசார தேரர்

Posted by - February 1, 2017 0
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஓர் கடுமையான தமிழ் இனவாதி என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற…

Leave a comment

Your email address will not be published.