‘டெபிட் கார்டில்’ மின் கட்டணம்

217 0

மின் கட்டண மையங்களில், ‘டெபிட், கிரெடிட் கார்டு’ வாயிலாக, கட்டணம் செலுத்தும் வசதியை, கிராமங்களில் செயல்படுத்த, மின் வாரியம் தாமதம் செய்வது, நுகர்வோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மின் கட்டணத்தை, ரொக்க பணத்திற்கு பதில், டிஜிட்டல் முறையில் வசூலிக்கும்படி, தமிழகம் உள்ளிட்ட அனைத்து, மாநில மின் வாரியங்களுக்கும், 2017 துவக்கத்தில், மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை யில், 16 மையங்களில், ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவி யில், டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் வசதி, அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த சேவை, 2017, அக்டோபரில் நடைமுறைக்கு வந்தது. இந்த புதிய சேவையால், நுகர்வோர் செலுத்தும் கட்டண தொகை, மின் வாரியத்தின் வங்கி கணக்கில், உடனே வந்து சேர்வதுடன், தாமதமாக வங்கியில் செலுத்துவது போன்ற ஊழியர்களின் முறைகேடுகளும் குறைந்தன.
இதுகுறித்து, கட்டண மைய ஊழியர்கள் கூறியதாவது:கட்டண மையத்தில், ரொக்க பணமாக செலுத்தும் போது, சில்லரை தட்டுப்பாடு, கிழிந்த நோட்டு போன்ற பிரச்னைகள் இருந்தன. கார்டு வாயிலாக வசூலிக்கும் போது, எந்த பிரச்னையும் இன்றி, விரைவாக நடக்கிறது.

ஆனால், கிராமங்களில், கார்டில் மின் கட்டணம் செலுத்தும் வசதி இல்லாததால், மக்கள், ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்கின்றனர். அனைத்து நகரங்களிலும், பாயின்ட் ஆப் சேல் கருவியில், மின் கட்டணம் வசூலிக்கும் சேவையை, அதிகாரிகள், விரைவாக செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a comment