அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவி அரசாணை வெளியீடு

22 0

தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 7,728 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொட்டுணர் கருவி என்ற பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை சட்டசபையில் 2018-19-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் தினசரி வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவி பொருத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பயோமெட்ரிக் கருவி அல்லது டாப் என்ற கணினி மூலம் வருகைப் பதிவு நடத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தநிலையில், முதல்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் 3,688 உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 41 ஆயிரத்து 805 பேருக்கும், 4,040 மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 774 பேருக்கும், ரூ.15.30 கோடி செலவில் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யலாம் என்று தேசிய தகவல் தொடர்பு மைய முதுநிலை தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தகவலியல் அதிகாரி கேட்டுக்கொண்டார். அதை பள்ளிக்கல்வி இயக்குனரும் பரிந்துரைத்தார்.
அதை அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த 7,728 பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவியை பொருத்தி ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post

பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது தமிழக அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

Posted by - January 7, 2019 0
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் அரசு எச்சரித்து உள்ளது.…

சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பதில் தவறு இல்லை – காங். எம்.எல்.ஏ. விஜயதாரணி

Posted by - February 11, 2018 0
தமிழக சட்டசபையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா படத்தை திறந்து வைப்பது தவறில்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கூறியுள்ளார்.

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு – ரூ.1 கோடி பரிசுப் பொருட்கள் தயார்

Posted by - February 10, 2017 0
வரலாற்று சிறப்புமிக்க உலகத்தமிழர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது.

நிலவேம்பு கசாயத்தால் பக்க விளைவு ஏற்படாது: சித்த மருத்துவர் விளக்கம்

Posted by - October 19, 2017 0
நிலவேம்பு கசாயம் குடித்தால் எவ்வித பாதிப்பும் பக்க விளைவும் ஏற்படாது என்று சித்த மருத்துவ நிபுணர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார்.

பாசனத்துக்காக சாத்தனூர் அணை 14-ந்தேதி திறப்பு – எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Posted by - May 10, 2018 0
சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

Leave a comment

Your email address will not be published.