சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது

12 0

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையும் குறைந்தது.

பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து ராக்கெட் வேகத்தில் விலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வரலாறு காணாத விலை உயர்வை பெட்ரோல்-டீசல் சந்தித்தன.
இந்த நிலையில் தொடர் உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக  இறங்கு முகத்தில் இருக்கிறது. கடந்த 18-ந் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து  பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வந்தது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இன்று பெட்ரோல், விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.24க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 19 காசுகள் குறைந்து ரூ.77.05-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த 22 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.86 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.99-ம் குறைந்துள்ளது.

Related Post

நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு-தீபா

Posted by - February 14, 2017 0
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பை…

ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டிய அமைச்சர்

Posted by - April 4, 2019 0
தேர்தல் பிரசாரத்தின் போது ஆண் குழந்தை ஒன்றுக்கு ஜெயலலிதா என்று அமைச்சர் பெயர் சூட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.  திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக எம்.எஸ்.எம். ஆனந்தன்…

வளிமண்டலத்தில் புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - November 18, 2018 0
‘வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் மழை பெய்யும்’, என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழக வங்கிகளில் ரூ.1,150 கோடி டெபாசிட்: ரிசர்வ் வங்கி

Posted by - November 12, 2016 0
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,150 கோடி ரூபாய் தொகையை மக்கள் டெபாசிட் செய்துள்ளனர் என இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.