சென்னையில் 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றம் – கடந்த ஆண்டை விட 15 டன் குறைவு

21 0

சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 15½ டன் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பட்டாசு வெடித்து குதூகலிப்பது வழக்கம். பட்டாசு வெடிக்கும்போது அதில் சுற்றியிருக்கும் காகிதங்கள் சிதறும். இதனால் தீபாவளி கொண்டாட்டத்துக்கு பிறகு தெருக்கள் முழுவதும் காகித குப்பைகளாகவே காணப்படும். பெரும்பாலானோர் வீட்டின் முன்பு உள்ள குப்பைகளை கூட்டி தெருக்களில் ஆங்காங்கே மேடுகளாக அமைத்து வைத்துவிடுவார்கள். அதனை மாநகராட்சி ஊழியர்கள் வந்து அகற்றுவார்கள்.

அந்தவகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என மொத்தம் 19 ஆயிரம் பேர் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் (மாலை 5.30 மணி வரை) 64½ டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது.

இந்த கழிவுகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள அபாயகரமான கழிவுகளை சேகரிக்கக்கூடிய தனியார் நிறுவனத்திடம் ஒவ்வொரு கட்டமாக ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த ஆண்டு 80 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன. அந்தவகையில் கடந்த ஆண்டை விட 15½ டன் குறைந்துள்ளது. பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Related Post

தமிழகம் முழுவதும் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

Posted by - December 7, 2018 0
தமிழகம் முழுவதும் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

Posted by - October 9, 2018 0
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் வைகோ – திமுகவினர் கருப்பு கொடி போராட்டம்

Posted by - April 12, 2018 0
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். 

சேலம் அண்ணா பூங்காவில் எம்ஜிஆர் – ஜெயலலிதாவுக்கு மணிமண்டபத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

Posted by - January 16, 2019 0
சேலம் அண்ணா பூங்கா அருகே ரூ.80 லட்சம் மதிப்பிலான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் அண்ணா…

Leave a comment

Your email address will not be published.