ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெஃப் செஸ்ஸன்ஸ்

17 0

அமெரிக்காவின் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அமைச்சரவை மற்றும் அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒரு வாரத்துக்குள் சில மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்து இருந்தார். அதன் முதல் எதிரொலியாக, அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்து வந்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெஃப்பின் சேவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது உடல்நலமுடன் வாழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தலைமை வழக்கறிஞர் பதவிக்கு விரைவில் மேத்யூ ஜி விடாகெர் நியமனம் செய்யப்பட உள்ளார் எனவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Post

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு – ஆஸ்திரேலிய பயங்கரவாதி மீது கொலை குற்றச்சாட்டு பதிவு!

Posted by - April 5, 2019 0
நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய பயங்கரவாதி பிரெண்டன் டாரன்ட் மீது 50 கொலை குற்றச்சாட்டுகளையும், 39 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் நீதிபதி பதிவு செய்தார்.…

தாக்குதல் பொறுப்பை ஏற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்

Posted by - April 23, 2019 0
இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கான  பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.

நேபாளத்தில் பயங்கரம் ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதி விபத்து 3 பேர் பலி

Posted by - April 15, 2019 0
நேபாளத்தில் நின்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். நேபாள நாட்டின் சொலுகும்பு மாவட்டத்தில் உள்ள லுக்லா என்ற இடத்தில் தரையில் இருந்து…

அமெரிக்காவில் மாபியா கும்பலின் தலைவன் கொடூர கொலை

Posted by - March 15, 2019 0
அமெரிக்காவின் மிகப்பெரிய மாபியா கும்பலின் தலைவன் பிரான்ஸிஸ்கோ கேலி, அவனது வீட்டின் வாசலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளான்.  அமெரிக்காவின் 20ம் நூற்றாண்டின் மாபெரும் மாபியா குடும்பங்களில் ஒன்றான…

Leave a comment

Your email address will not be published.