ஆப்கானிஸ்தானில் சுங்கச்சாவடியில் தலீபான்கள் தாக்குதல் – 7 போலீசார் பலி

24 0

ஆப்கானிஸ்தானில் உள்ள பராக் மாகாணத்தின் சுங்கச்சாவடியில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் பலியானார்கள். 

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் உள்நாட்டு படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறி வருகின்றன.

அங்கு சமீப காலமாக தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாத நாள் இல்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பராக் மாகாணத்தின் தலைநகரான பராக் நகரில் தெக்யாக் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தலீபான் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராததால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிலை குலைந்து போயினர். அவர்களால் சுதாரித்து எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் போய் விட்டது.

இந்த தாக்குதலில் 7 போலீசார் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் தலீபான் பயங்கரவாதிகள் அள்ளிச்சென்று விட்டனர்.

இந்த தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என தலீபான் பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், 7 போலீசாரை கொன்று அந்த சுங்கச்சாவடியை தாங்கள் கைப்பற்றி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post

காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் – தனது நாட்டினருக்கு அமெரிக்கா அறிவுரை

Posted by - March 11, 2019 0
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்கர்கள் காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அறிவுரை கூறியுள்ளது.  இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி…

ஒட்டுமொத்த வயிற்றையும் அறுவை சிக்கிச்சை செய்து அகற்றுவதற்கு முன் கடைசியாக பிரியாணி சாப்பிட்ட துபாய் வாலிபர்

Posted by - September 25, 2018 0
வயிறு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாலிபரின் ஒட்டுமொத்த வயிற்றையும் அறுவை சிக்கிச்சை மூலம் அகற்றுவதற்கு முன்னர் அவர் கடைசியாக பிரியாணி சாப்பிட வேண்டும் என கோரிக்கை வைத்த சம்பவம்…

நியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்கு தடை – அடுத்த மாதம் சட்டம் அறிமுகம்!

Posted by - March 21, 2019 0
நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2…

முதன் முறையாக கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தப்பட்டது: போலந்து

Posted by - December 23, 2016 0
உலகில் முதன் முறையாக பிறவியிலேயே கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தி போலந்து டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் அதிபர் கைது!

Posted by - March 23, 2019 0
ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் அதிபர் மிச்சல் டெமர் கைது செய்யப்பட்டார்.  பிரேசிலில் 2016 முதல் 2018 வரை அதிபராக இருந்தவர் மிச்சல் டெமர் (வயது 47).…

Leave a comment

Your email address will not be published.