அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடைக்கால தேர்தல் – பின்னடைவை சந்தித்த அதிபர் ட்ரம்ப்!

22 0

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதியின் 4 ஆண்டு பதவிக்காலத்தில் 2 ஆண்டுகளின் முடிவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையின் (மேல்சபை) மூன்றில் ஒரு பகுதியான 33 இடங்களுக்கும் தேர்தல் நடத்துவது வழக்கமான ஒன்று. ஜனாதிபதி பதவிக்காலத்தின் மத்தியில் வருவதால் இடைக்கால தேர்தல் என்ற பெயரைப் பெற்றது.

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இது 2 ஆண்டு கால டிரம்ப் பதவிக்காலத்துக்கான பொது வாக்கெடுப்பாக அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, நாடாளுமன்றத்தின் கீழ்சபையை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவையான நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, 219 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி 193 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி, ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும். இதன்மூலம் டிரம்ப் நிர்வாகம், தொழில் சார்ந்த முடிவுகள், வருமான வரி விவகாரங்கள் தொடர்பாக ஜனநாயக கட்சியினர் விசாரணை நடத்த முடியும் என்பதால் மீதமுள்ள 2 ஆண்டு காலம் டிரம்புக்கு போராட்டமாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேல்சபையான செனட் சபையில் ஏற்கனவே குடியரசு கட்சிதான் பெரும்பான்மை பெற்றிருந்தது. இப்போது 33 இடங்களுக்கு நடந்த தேர்தலிலும் முன்னிலை பெற்ற அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி, மொத்தம் 51 இடங்களையும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 45 இடங்களையும் பெற்றுள்ளது. அதிபரால் அதிக கவனம் செலுத்தப்பட்ட இந்த செனட் சபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

4 ஆண்டுகள் அதிபர் பதவிக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி கீழ் சபையை பறிகொடுத்தது அவருக்கான பின்னடைவாக கருதப்படுகிறது.

Related Post

இந்தோனேசியாவில் 16 போலீசாருடன் சென்ற விமானம் மாயம்

Posted by - December 3, 2016 0
இந்தோனேசியாவில் இன்று 16 போலீசாருடன் சென்ற விமானம் தகவல் தொடர்பை இழந்து காணாமல் போனது. கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

பயணதடை குறித்த மற்றுமொரு பத்திரத்தில் ட்ரம்ப் நாளை கைச்சாத்து

Posted by - March 5, 2017 0
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த சில தரப்பினர் அமெரிக்காவினுள் நுழைவது குறித்த தடை தொடர்பான சட்ட மூலம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நடந்த மோதல்களில் 24 பேர் பலி

Posted by - March 30, 2019 0
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நடந்த மோதல்களில் 24 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை இன்னும் முற்றிலும் ஒழிக்க முடியாத நிலை நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று…

ஐ.எஸ் இயக்கத்திற்கு நிதி மற்றும் ஆட்களைத் திரட்டிய சென்னை வாசி கைது

Posted by - July 4, 2017 0
ஐ.எஸ் இயக்கத்திற்கு நிதி மற்றும் ஆட்களைத் திரட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் இன்று காலை ராஜஸ்தான் மாநில காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்…

ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்

Posted by - July 13, 2016 0
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா முஸ்லிம்கள் அதிக வசிக்கும் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 11 பேர் வரை பலியாகினர். சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.…

Leave a comment

Your email address will not be published.