மதுகம, யட்டதொலவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வலய சட்டத்தை அமுலாக்கும் பிரிவினரால் நேற்று இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து வௌிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி உட்பட அருவாள் ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் ருவன்கொட, தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய புத்தியக விஜயசிறி எனப்படும் மல்டியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அவர் மதுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட உள்ளார்.

