இரு பிரதமர்களுக்கும் தமது வாக்குகளை பயன்படுத்த மாட்டோம் எனவும், அரசியல் சதி முயற்சிகளை தோற்கடிப்பதற்காக தமது வாக்குகளைப் பாராளுமன்றத்தில் பயன்படுத்தவுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசியல் மாற்றம் ஒரு சதி முயற்சியாகும். பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததும் அதற்காகவே ஆகும். இதனை தோற்கடிப்பதற்கு பாராளுமன்றத்தைக் கூட்டியவுடன் தமது வாக்குகளைப் பயன்படுத்தவுள்ளதாகவும் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் புதிய அரசியல் கொள்ளைப் பிரகடனத்துக்கு எதிராகவும், அரசியல் அமைப்புக்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ள நியமனத்துக்கு எதிராகவும், புதிய அரசாங்கத்தினால் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிராகவும் வாக்களிக்க தயாராகவுள்ளோம்.
இந்த அரசியல் சதி முயற்சிக்கு எதிராக ஒன்றுபடுமாறு நாம் பொதுமக்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

