நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துமாறு கோரி நாளை மறுதினம் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்துவது இந்த எதிர்ப்பு கூட்டத்தின் நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

