அண்மையில் பிரதி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தற்பொழுது அலறி மாளிகையில் நடைபெறும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஹரீன் பெனாண்டோ இந்த தகவலை தெரிவித்தார்.
அதேவேளை அவர் ரணில் விக்ரமசின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மனுஷ நாணயக்கார கடந்த முதலாம் திகதி தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

