புதிய அரசியலமைப்புத் தொடர்பாக சட்ட ஆலோசனை வழங்க பிரித்தானிய வல்லுநர்கள் நாளை சிறீலங்கா பயணம்

263 0

parliment2புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், அது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக இரண்டு பிரித்தானிய சட்ட வல்லுநர்கள் நாளை சிறீலங்கா  வருகைதரவுள்ளனர்.

கிரமன் ஜெஃப்ரி ஜோயல் மற்றும் டேனியேன் சிரன்பர்கே எனப்படும் குறித்த இரு சட்ட அறிஞர்களும் நாளை (திங்கட்கிழமை) சிறீலங்காவுக்கு வரவுள்ளனர்.

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக நாளை தொடக்கம் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

குறித்த அரசயிலமைப்பானது, நாட்டின் சகல கட்சிகள் மற்றும் மக்களது எண்ணங்களை பிரதிபலிக்கும் மற்றும் அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதாக அமையுமென அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பு குறித்த செயலணி துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.