மாணிக்கக்கல் அகல்வு முயற்சி முறியடிப்பு!

256 0

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கெசல் கமுவ ஓயாவிற்கு அருகில்கிளை ஆறு ஒன்றினை அகலப்படுத்தும் நோக்கில் குறித்த  ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகல  முற்பட்ட போது   குறித்த சம்பவம் இன்று காலை 11.30மணி அளவில் நோர்வுட் பொலிஸாரால்  முறியடிக்கபட்டுள்ளதாக   தெரிவித்தனர்.

 

குறித்த பகுதியில் உள்ள கிளை ஆறு ஒன்றினை அகலப்படுத்தும் நோக்கில் அம்பகமுவ பிரதேச செயலாளர் காரியாளயத்தின் ஊடாக வழங்கப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான வேலைத்திட்டத்தினை ஹட்டன் பகுதியை சேர்ந்த  ஒருவர் பெக்கோ இயந்திரத்தினை கொண்டு கிளை ஆற்றின் நடுபகுதியில் இருந்து ஆற்றினை அகலப்படுத்துவதாக தெரிவித்து  கெசல்கமுவ ஓயா ஆற்றின் அருகாமையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மூங்கில்கள் அழிக்கபட்டு மாணிக்ககல் அகல்வினை மேற்கொள்ள முற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 

இதனால் கெசல்கமுவ ஓயாவில் மண் நிறைந்து காசல்ரீ நீர் தேக்கத்திற்கு அல்லுண்டு சென்றுள்ளதோடு பாரிய மூங்கில்கள் சரிக்கபட்டு கெசல்கமுவ ஓயாவில் வீசப்பட்டு கிடந்ததாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜின்  கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து சம்பவ இடத்திற்கு இந்த சம்பவம் தொடர்பில் குறித்த ஆற்றினை அகலப்படுத்தும் நடவடிக்கையினை தற்காலிகமாக நிறுத்துமாறு அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.பி.டி.சுமனசேகரவிடம் கேட்டு கொண்டதற்கு இணங்க தற்பொழுது ஆற்றினை அகலபடுத்தும் நடவடிக்கை இடைநிறுத்தபட்டுள்ளதாக முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவிதார்.

 

இதேவேளை குறித்த ஆற்றினை அகலபடுத்தும் நடவடிக்கையினை வேறு ஒரு நபருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு அவரின் ஊடாக குறித்த ஆற்றின் அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளபடும் என அம்பகமுவ பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment