மஹிந்தானந்த அளுத்கமகே மீதான வழக்கு ஒத்திவைப்பு

254 0

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஜனவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாரச்சி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரசின் தலைவராக இருந்த போது அந்த தொழிற்சங்கத்துக்கு சொந்தமான 39 இலட்சம் ரூபா நிதியை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment