வாஸ் குணவர்த்தன மீது மற்றும் ஒரு குற்றச்சாட்டு!

327 0

dig-vaas-gunawardena-e1441606112575பல குற்றச்சாட்டுக்களுடன் தண்டனைகளை பெற்றுள்ள முன்னாள் பிரதிபொலிஸ் மாஅதிபர் வாஸ் குணவர்த்தனவின் மீது மற்றும் ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

ஊடவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பிலேயே இந்தக் குற்றச்சாட்டுசுமத்தப்பட்டுள்ளது.இந்தநிலையில் கொலை தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாககுற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் மேலதிக தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை.பம்பலபிட்டி வர்த்தகர் கொலை மற்றும் மாலபே மருத்துவக் கல்லூரி மாணவன் மீதானதாக்குதல் உட்பட்ட குற்றச்சாட்டுக்கள், வாஸ் குணவர்த்தனவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை அறிந்ததே.