கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தெமட்டகொடையில் அமைந்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து அர்ஜுண ரணதுங்கவை பிணையில் 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ததோடு அவரின் பாதுகாவலரை அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

