மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை ஏற்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
திஸ்ஸமகாராமயில் இடம்பெற்றுவரும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன். இதற்கு தேர்தல் ஆணைக்குழுவுன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன்.
இதேவேளை, புதிய அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர செயற்படுவாரென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

