நாளை ஜனநாயகப் போராட்டம் ! அனைவரும் கலந்துகொள்ளவும் – அகிலவிராஜ்

311 0

ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கின்ற அனைவரும்  நாளையதினம் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அகிலவிராஜ் காரியவசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அலரி மாளிகையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கின்ற அனைவரும் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

இந்த மாபெரும் போராட்டம் நாளை மதியம் 12.30 மணிக்கு கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment