வீதியை விட்டு விலகி குடைசாய்ந்த லொறி!

371 0

சிலாபம் – குருணாகலை வீதியில் முன்னேஸ்வரம் பகுதியில் சிறிய ரக லொறியொன்று பாதையை  விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

முன்னேஸ்வரம், நீர்வழங்கல் திணைக்களத்துக்கு சொந்தமான வகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனம் நீர்வழங்கல் திணைக்களத்திலிருந்து சிலாபம் நோக்கி பயணம் செய்யும்போது, வேகக் கட்டுப்பாட்டை மீறி பாதையிலிருந்து விலகி குடைசாய்ந்து அருகிலிருந்த மதிலில் மோதுண்டுள்ளது.

 

இதன் போது வாகனத்திலிருந்த சாரதியும், அதிகாரியொருவரும் சிறு காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment