வவுனியா, குருமன்காட்டு சந்தியில் இன்று இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

மோட்டார் சைக்கிள் ஒன்றும் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதியமையினாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

 

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சிறு காயங்களுக்குள்ளாகிய நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.