ஹெரோயினுடன் இருவர் கைது

476 0

மீடியாகொட – சேனாநாயக்க  மாவத்தை வேரகொட பகுதியில் ஹெரோயின் பொதி செய்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று  செவ்வாய்க்கிழமை  மீடியாகொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய  மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 2கிராம் 710 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் உட்பட இலத்திரணியல் அளவை இயந்திரம் மற்றும் 8800 ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சேனாயாக  மாவத்தை,  வேரகொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் பின்புறத்தில் மேற்படி பொதி செய்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சமயத்திலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள்  சேனாநாயக்க மாவத்தை , வெரகொட , மீடியாகொட பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நுவன் சம்பத்த மற்றும்  இல, 320  எ, மீடியாகொட பகுதியை சேர்ந்த 23 வயதுடைய  சரித் நுவன் என்பவை ஆர்ம்ப  கட்ட விசாரணைகளில்  தெரியவந்துள்ளது.

அத்துடன் சந்தேக நபர்கள்  நேற்று பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை மீரியாகொட பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a comment