அச்சக கூட்டுத்தாபன காணியை இராணுவத்துக்கு வழங்க முயற்சி-யோகேஸ்வரன்

358 0

மட்டக்களப்பு கும்புறு மூலையில் அரச அச்சக் கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்ட காணியை இராணுவத்துக்கு வழங்கும் முயற்சியை உடன் கைவிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாருக்கு அனுப்பிவைத்துள்ள கடித்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள, கும்புறுமூலை முச்சந்தியின் அருகில் முன்பு தாபிக்கப்பட்டு யுத்த சூழலினால் பாதிக்கப்பட்ட அரச அச்சகக் கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்ட காணியை, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் இராணுவத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிகின்றேன்.

இக்காணியில் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் உட்பட தொழில் பேட்டைகள் எதிர்காலத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாலும், இக் காணியிலோ அல்லது இதற்கு அருகாமையிலோ இராணுவமுகாம் அமைக்கும் திட்டத்திற்கு காணியை வழங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். பதிலையும், நடவடிக்கைகளையும் கோருகிறேன். என குறிப்பிடப்பட் கடித்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர் ஆளுநர், மாகாண காணி ஆணையாளர் கோறளைப்பற்று பிரதேச செயலாளர், கிரான் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a comment