வவுனியாவில் விபத்தில் இருவர் படுகாயம்

9720 56

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதி பயிற்சி வழங்கும் முச்சக்கர வண்டியும், காரும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா நொச்சிமோட்டையில் இருந்து தாண்டிக்குளம் நோக்கிச் சென்ற சாரதி பயிற்சி நிறுவனமொன்றுக்கு சொந்தமான முச்சக்கரவண்டியும் தாண்டிக்குளம் பகுதியில் வவுனியா நகரில் இருந்து சென்ற காரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியில் பயிற்சியில் ஈடுபட்ட பூனாவையை சேர்ந்த பிரேமவங்ச (வயது 40), இரங்க (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment