ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பிக்குகள் பேரணி

392 0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்  கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி 200 க்கும் மேற்பட்ட பிக்குகள் பேரணி ஒன்றை நடத்தவுள்ளனர்.

குறித்த பேரணி கொழும்பு அத்துருகிரிய நகரில் இன்று பி.ப 3.00 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளது. பேரணியின் நிறைவில் ​ ஞானசார தேரருக்கு ஆசி வேண்டி விசேட பூஜை ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இந்த பூ​ஜை மாலை 6.00 மணிக்கு பேராசிரியர் ​ஹிந்துருகரே தம்மரத்தன தேரர் தலைமையில் நடைபெறவுள்ளதாக பொதுபல சேனா ​அமைப்பின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Leave a comment