அமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்!

28 0

“இந்திய அமைதிப்படை” என்ற பெயரில் தமிழீழ மண்ணில் தமது ஆதிக்க கால்களை பதித்த இந்திய வல்லரசு இராணுவம் ஈழ மண்ணில் தன் கோரதாண்டவத்தை ஆடியது.

அரசியல் பலியாக தியாகி லெப் கேணல் தீலீபனை காவுகொண்டது.வஞ்சகப்பலியாக லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு விடுதலைப்புலிகளை களப்பலியாக்கியது. அடுத்து வெகுசனப்பலியாக யாழ். போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21, 22 ஆம் திகதிகளில் மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உட்பட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களுமாக 68 பேர் கொலை செய்யப்பட்டார்கள்.

ஈழ விடுதலைப்போராட்டத்தில் இந்திய ஆக்கிரமிப்பு படைகள் நடாத்திய பல்வேறு கொலைத் தாண்டவத்தில் யாழ் போதான வைத்தியசாலைப் படுகொலை தமிழ் மக்கள் மனங்களில் என்றும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவை.

உயிர்காக்க சென்ற மருத்துவ மனையிலேயே உயி்ர் பலி எடுத்த கோர சம்பவத்தை எப்படித்தான் மறக்க முடியும்?

இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்த தினத்தையே எமது போராட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன். எமது போராட்டத்தில் இந்திய ராணுவம் தலையீடு செய்தது ஓர் இருண்ட அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்” – என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் கூறினா்ர். எனவே, தேசியத்தலைவர் குறிப்பிட்டது போன்று என்றும் ஈழ விடுதலையில் இந்தியாவின் பங்கு ஓர் இருண்ட பக்கமே.

ஈழப் போராட்டம் வெற்றியின் விளிம்புக்கு செல்லும் ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒரு வகையில் தடுத்து நிறுத்திக்கொண்டேதான் இந்திய அரசு இருக்கின்றது.

ஈழத்தமிழர்களின் இதயத்தில் ஏற்படும் வலி இமயநாட்டிற்கு புரியாமையின் காரணம் தான் என்னவோ?  பிராந்திய அரசியலும் புவிசார்பு அரசியலும் தான் ஈழ விடுதலையை அழித்தனவோ?

Related Post

மாவீரர்களின் சரித்திரச் சாவினை ஒன்றாக நினைவு கூறுங்கள்!

Posted by - November 10, 2017 0
“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒர் உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு.…

திலீபனின் நினைவேந்தலில் பார்த்தீபனின் தாயாரால் ஈகச்சுடரேற்றல்!

Posted by - September 15, 2017 0
இன்று (15) தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்கம் நல்லூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவுத் தூபி அமைந்திருந்த…

ஐ. நா வே! முள்ளிவாய்காலின் இரண்டாம் கட்டமா சிரியா?

Posted by - March 2, 2018 0
ஒன்பது வருடங்களுக்கு முன் அதாவது 2009 இல் ஈழத்தின் இறுதி யுத்தம் என கூறப்படும் “முள்ளிவாய்கால் மனித பேர் அவலம்” மீண்டும்  2018 இல் பூமி பந்தில்…

புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் என்னும் சொற்பதத்தை இல்லாதொழிக்க சிறீலங்கா முயற்சி

Posted by - August 5, 2017 0
இன்றுவரை சகல நாடுகளிலும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களை ஒருங்கிணைத்து தமிழீழ விடுதலைக்காகவும் அவர்களின் கலை கலாச்சாரத்தினைக் காப்பதற்காகவும் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறக்கும் எங்கள் எதிர்காலச் சந்ததியினருக்கு அவற்றைக்…

Leave a comment

Your email address will not be published.