தலவாக்கலையில் பாரிய மண்சரிவு அபாயம்

58 0

தலவாக்கலை நகரசபைக்கு உட்பட்ட வனிகசேகர வீமைப்பு திட்ட பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்தேக்கத்தை அண்மித்த 80 குடியிருப்புக்களை கொண்ட பகுதியிலே நிலம் வெடிப்புக்களும் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்க திட்டத்தின் போது குறிப்பிட்ட பகுதிளுக்கு மாத்திரம் கரையோரத்தில் பாதுகாப்பு மதில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்குறிப்பிட்ட குடியிருப்பை அண்மித்த பகுதியில் பாதுகாப்பு மதில் அமைகக்கவில்லை என குடியிருப்பாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அண்மைக்காலமாக காணப்படும் சீரற்ற காலநிலையில் மலையகத்தில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் வனிகசேகரபுர குயிடிருப்பு பகுதியிலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.

கரையோர பகுதிக்கு உடனடியாக பாதுகாப்பு மதிலை அமைக்க மேல் கொத்தமலை திட்ட பொறுப்பதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனிகசேகரபுர வீட்டுத் திட்ட குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment

Your email address will not be published.