மஹிந்தவின் தடுமாற்றம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – ஐ.தே.க.

314 0

முன்னாள்  பிரதம நீதியரசர்   சிறியாணி பண்டாரநாயக்கவின் பதவி விலக்கியமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் தடுமாற்றமே   பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அரசியமைப்பிற்கும், சட்டவாட்சி  கோட்பாட்டிற்கு முரணாகவே   சிறியாணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில் நீதித்துறை  சுயாதீனமாக செயற்பட்டது என்று எதிர் தரப்பினர் குறிப்பிடுவது நகைப்பிற்குரியது.

அக்காலக்கட்டத்தில் நீதித்துறை  எவ்வாறு குடும்ப ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்பதை பெரும்பாண்மையான மக்கள் நன்கு  அறிவார்கள் எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்தரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு   குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

முன்னாள் ஜனாதிபதி   மஹிந்த ராஜபக்ஷவிடம்  பிரதம நீதியரசரின் பதவி நீக்கம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவரால் நியாயமான மற்றும் முறையான பதலினை குறிப்பிட முடியாமல் தடுமாறி விட்டார்.

அரசியலமைப்பில்  குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டே  அவரை பதவி நீக்கம் செய்தோம் என்று குறிப்பிடுபவர்கள் அவர் மீது அக்காலக்கட்டத்தில் சாட்டிய குற்றத்தினை முறையாக குறிப்பிடவில்லை.

Leave a comment