சட்டத்துக்கு மாறான முறையில் தனது வருமானத்தை மீறி சொத்துக்களை உழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கு தொடர்பிலான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 11ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்போது இலஞ்சம் மற்று ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னிலைப்படுத்தப்பட்ட சாட்சியாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் தனது வருமானத்தை மீறி முறையற்ற விதத்தில் 40 மில்லியனுக்கும் அதிக சொத்து சேர்த்ததாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம் மற்று ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

