ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரைக் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிடம் இன்று(19) குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 09 மணி முதல் சுமார் 9 மணிநேரம் அவரிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாலக்க சில்வாவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் தேவை ஏற்படின் மாத்திரம் அவர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நாலக்க சில்வாவிடம் நேற்றைய (18) தினமும் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

