எரிபொருள் விலைச் சூத்திரம் ஏமாற்று வித்தை- எரங்க குணசேகர

475 0

நல்லாட்சி அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள எரிபொருள் விலைச் சூத்திரம் வெறுமனே ஏமாற்று வித்தையாகும் என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

நேற்று நாட்டுக்கு அறிமுகம் செய்த எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி இந்த மாதம் அறிமுகம் செய்த புதிய எரிபொருள் விலை சிக்கலாகவுள்ளது. சாதாரண டீசல் மற்றும் மண்ணெண்ணை  என்பவற்றின் விலை அதிகரிக்க வில்லை.

ஒரு பொருளுக்கான விலைச் சூத்திரம் ஒன்று இருந்தால், அதேவகையான பொருள் ஒன்றின் விலை அதிகரித்து இன்னுமொன்றின் விலை அதிகரிக்காமல் இருக்க முடியாது.

இந்த சூத்திரம் அமைச்சர் மங்கள சமரவீரவினால் புதிதாக தயாரிக்கப்பட்ட ஒன்று அல்லவெனவும், 2003 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒன்று எனவும் எரங்க குணசேகர மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment